முகப்புகோலிவுட்

கலைமாமணி விருதை தொடர்ந்து பிக்பாஸ் சரவணனுக்கு அடித்த ஜாக்பாட்!

  | September 11, 2019 14:32 IST
Bigboss

துனுக்குகள்

  • இந்ததாண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார் சரவணன்
  • தற்போது திரைப்பட தேர்வு குழு உறுப்பினராக இடம் பெற்றிருக்கிறார் இவர்
  • பிக்பாஸ் போட்டியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் சரவணன்
சிறந்த படங்களை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் பிக்பாஸ் சரவணன் இடம் பெற்றிரக்கிறார். 

தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகம் பிக்பாஸ் போட்டியாளராக இருந்து சமீபத்தில் வெளியேறியவர் நடிகர் சரவணன். இவர் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார் என்கிற கேள்வி இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. இவர் அந்த போட்யில் இருந்து வெளியேறியதும் இவர் நடித்த படத்திற்காக தமிழ அரசு சார்பாக கலைமானி விருது இவருக்கு வழங்கி பெருமை படுத்தியிது.
 
தற்போது தமிழக அரசு சார்பாக மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது சரவணனுக்கு. தமிழக அரசு தரமான திரைப்படங்களை தேர்வு செய்து மானியமாக ரூ, 7,00,000 வழக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு, படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில் 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் வெளியான படங்களைத் தேர்வு செய்வதற்காக புதிய `திரைப்பட மானியத் தேர்வுக்குழு'வை நியமித்திருக்கிறது தமிழக அரசு.
 
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரனைத் தலைவராகக் கொண்ட தேர்வுக் குழுவில், உறுப்பினர்களாகத் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வசனகர்த்தா லியாகத் அலிகான் மற்றும் நடிகர்கள் சிங்கமுத்து, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்