முகப்புகோலிவுட்

“2020 போதும் பா” கவலையில் கவின்.! “பாத்து பண்ணுங்க”

  | June 11, 2020 20:26 IST
Kavin

‘லிஃப்ட்' படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புடன் வலம்வந்தவர் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கான விசிறிகள் அளவு அதிகரித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இலங்கை தமிழச்சி லாஸ்லியா மீது காதல் கொண்டார். பிக் பாஸில் இவர்களின் காதல் கதை ஒரு தனிக்கதை.

அதற்கு பின் தற்போது லாஸ்லியா கதாநாயகியாக மாற, ஏற்கனவே ‘நட்புன்னா என்னனு தெரியுமா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவின், பிக் பாஸிற்கு பிறகு தற்போது ‘பிகில்' பட நடிகை அம்ரிதா ஐயருடன் ஜோடி சேர்ந்து ‘லிஃப்ட்' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக 5வது லாக்டவுனில் நாம் அனைவரும் உள்ள நிலையில், தற்போது கவின் தனது ஆதங்கத்தை ரசிகர்களுடன் வெளிப்படுத்தியுள்ளார். தனது வீட்டின் வராண்டா சுவற்றின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, சோகமாக தலையில் கையை வைத்துள்ள அவரது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “2020 போதும் பா.. முதல் பாதி சோகாமா இருந்தாலும், 2வது பாதி சந்தோஷமா முடிச்சு வைப்பிங்கனு நம்புறோம்.. பாத்து பண்ணுங்கா.!” என பதிவிட்டுள்ளார்.

‘லிஃப்ட்' திரைப்படத்தை வினீத் வரப்பரசாத் இயக்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு, ‘லிஃப்ட்' படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியானது. மேலும் இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com