முகப்புகோலிவுட்

பிக் பாஸ் 4வது வாரம்: 'இப்படி அடுச்சுக்கோங்க, நல்லா இருக்குல!'

  | July 22, 2019 19:26 IST
Bigg Boss Tamil 3

துனுக்குகள்

  • இந்த வாரம் மோகன் வைத்தியா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்
  • இந்த வார கேப்டனானார் ரேஷ்மா
  • இந்த வார பிக்பாஸில் குறும்படம் இடம்பெற்றிருந்தது

பிக்பாஸின் 26 வது நாளில் அடுத்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. முன்னதாகவே, கேப்டன் போட்டியில் இவர்கள் மூவர்தான் பங்கேற்க வேண்டும் என தேர்வாகியிருந்தார்கள். அதன்படி, சரவணன், தர்ஷன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டி என்னவென்றால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கப்களை ஒரு மேசையில்மீது அடுக்க வேண்டும். அவர் அடுக்கிக்கொண்டிருக்க வீட்டின் மற்ற உறுப்பினர்கள் ஸ்மைலி பந்துகளை கொண்டு அடுக்கி வைத்திருந்த கப்களை கலைத்துக்கொள்ளலாம். போட்டி நேர முடிவில் யார் அதிக கப்களை அடுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். அந்த பந்துகளை தடுக்க ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டிலிருந்து நான்கு பேரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். போட்டியின் முடிவில் அதிக கப்களை அடுக்கி, ரேஷ்மா வெற்றி பெற்று, இந்த வார கேப்டன் ஆனார்.

06894f48

அடுத்து, அபிராமி தொகுப்பாளராக, 'ப்ரூட்டி லைப் ஷோ' என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாண்டி ரேஷ்மா பற்றியும், தர்ஷன் செரின் பற்றி பேசியும் நிக்ழ்ச்சி சிறப்பாகவே சென்றது. 

ccfv04d8

முன்னதாக மோகன் வைத்தியா, சாக்க்ஷி, செரின், அபிராமி, ரேஷ்மா என அனைவருடன் இணைந்து, சாண்டி பயிற்சியில் 'நான் ஒரு டிஸ்கோ டான்சர்' பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார். பிக் பாஸ் 27வது நாளை அந்த பாடலுடனே துவங்கினார். அன்று சாக்க்ஷிக்கு பிறந்தநாள். பிறந்த நாள் கொண்டாட்டத்துடனே அந்த நாள் முடிவடைகிறது.

7h07iq58

அடுத்து கமலுடனான உரையாடல். லாஸ்லியா-செரின் பிரச்னையிலிருந்து, கவின்-சாக்க்ஷி-லாஸ்லியா அவர்களின் சாக்லேட் பிரச்னை வரை அனைத்தையும் விவாத்தித்தார். முதலில் பேசத்துவங்கியது மோகன் வைத்தியா அணி மாறியது. பாத்ரூம் டீமிலிருந்து, குக்கிங் டீமிற்கு செல்ல கேட்டு, சாக்க்ஷி அவரை வாசிங் டீமிற்கு மாற்றிவிட்டார். அவருக்கு தண்ணீரில் வேலை செய்ய பிரச்னையாக இருக்கிறது என அணியை மாற்றிக்கொடுக்க வேண்டினார். கமல் இது பற்றி கேட்க காரணம்,"உண்மையில் தண்ணீர் பிரச்னைதானா, இல்லை அருவெறுப்பு காரணமாகவா?" என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள. இதை கமலே உரையாடலின் முடிவில் கூறியிருந்தார்.

khl1vqig

இந்த கேள்வியுடன், அப்படியே லாஸ்லியா பக்கம் நகர்கிறார். லாஸ்லியா செரின் செய்த சப்பாத்தியில் கத்தியை வைத்து குத்தியதற்கான காரணத்தை,"வெந்த சப்பாத்தியில் வேலை பாய்ச்சியதற்கான காரணம் என்னவோ?" என வினாவுகிறார். லாஸ்லியா அதுபற்றி விவரிக்க, இடையில் விவாதத்தை தர்ஷனிடம் திருப்ப,"நான் கதை சொல்றேன், கேளுங்க" என லாஸ்லியா சொன்னது ஒரு கியூட் மூமேன்ட். வழக்கமாக லாஸ்லியா, தர்ஷனுடன் அமர்ந்துதான் சாப்பிடுவார். அன்று தர்ஷன் அவருடன் அமர்ந்து சாப்பிட வரவில்லை. அந்த கொவத்தில்தான் கத்தியால் குத்தியதாக விவரித்திருந்தார். 

ihblpuu8

அடுத்து மீராவின் பிரச்னை பேசப்பட்டது. இது வீட்டில் பேசி அழுத்துப்போன, பல முறை விவாதத்திற்கு உள்ளான, மீண்டும் மீண்டும் ஒரு விவாதத்திற்கும் சண்டைக்கும் காரணமாக இருந்த பிரச்னை. இந்த விவாதம் குறித்து இருவரிடையேவும் கருத்து கேட்ட கமல், பிரச்னை முடிந்தது என கேட்க, பலரும் முடியல என சொல்ல, மேலும் குறும்படம் வேண்டும் என அனைவரும் வேண்டினர். 'மீரா விருப்பம்! ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு' என இடைவேளை முடிந்தவுடன் குறும்படத்தை போட்டுக்காட்டுகிறார். முதலில், பிரச்னை துவங்கிய இடத்திலிருந்து அந்த வீடியோ துவங்கியது. அடுத்து கவின் மன்னிப்பு கேட்டது, எல்லோருக்கும் நான் பங்காற்றியது அனைவருக்கும் தெரிய வேண்டுமென மீரா கேட்க சாக்க்ஷி 'மீட்டிங் ஏற்பாடு செய்ததுவரை ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. 

இந்த விவாதத்தின் இடையில் சாண்டி மீராவிற்கு ஹை-பை கொடுக்க 'இப்படி அடுச்சுக்கோங்க, நல்லா இருக்குல!' என்றார் கமல்.

62onesp8

விவாதத்தின் இடையில் 'அவங்க புள்ளி வச்சாங்க, நான் கோடு போட்டேன்' என மீரா சொல்லி, 'நீ எப்பொவும் புள்ளி வச்சா கோலமே போடுவியே' என சாண்டி கவுன்டரும் அரங்கேறியது.

அடுத்து கவின் விஷயத்தை பற்றி பேசவும் கமல் தவறவில்லை. சாக்லேட் விஷயத்தில் ஆரம்பித்த பிரச்னையை, 'இரண்டு' சாக்லேட்களை கொடுத்து முடித்து வைத்தார் கமல்!

d3pu0ksg

இந்த வாரத்தின் அனைத்து பிரச்னைகளும் பேசித் தீர்ந்தாச்சு. அடுத்து எளிமினேஷன். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மோகன் வைத்தியா வெளியேறினார். 

இடையில், ஒருவர் பற்றி அவர்கள் புறம் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை சொல்லி, அதை யார் சொல்லியிருப்பார் என யூகிக்கக் கேட்டார் கமல். இப்பொ யார்னு கண்டுபிடிச்சு அடுச்சுக்கனும். அதுதான உங்க ஆசை?

தற்போது வரை அனைத்து பிரச்னைகளும் பேசித்தீர்க்கப்பட்டது. கமல் புயலிற்குப்பின் இந்த நாள் அமையானதாக இருக்குமா, இந்த வார நாமினேஷனில் யார் எல்லாம் இடத்தை பிடிக்கப்போகிறார்கள்?

-சு முரளி

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்