முகப்புகோலிவுட்

பிக் பாஸ் 29வது நாள்: "பாட்டு பாடவா! பார்த்து பேசவா!"

  | July 23, 2019 11:55 IST
Bigg Boss

துனுக்குகள்

  • இந்த வார நாமினேஷனில் ஆறு பேர்
  • மோகன் வைத்தியா போல சாண்டி இமிடேட் செய்திருந்தார்
  • இரவில் "பாட்டு பாடவா! பார்த்து பேசவா!" என டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது

'ஐய்யோ பாக்காத!' அட நான் சொல்லலைங்க, பிக் பாஸ் சொன்னார். அட காலைல பாட்டு போட்டு எல்லோரையும் எழுப்பி விடுவாரே, அப்படி இன்னைக்கு போட்ட பாட்டுதான் 'ஐய்யோ டக்குனு டக்குனு டக்குனு என பாக்காத!'. பாட்டு முடிந்தவுடன், காய்ந்து கொண்டிருந்த துணியை எடுக்க சென்றார்கள், கவினும் சாண்டியும். அங்கு மோகன் வைத்தியாவின் ட்ரௌசர் காய்ந்து கொண்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள், "நைனா ஓ நைனா" என பாட்டு பாடிக் கொண்டு வலம் வந்தார். பின் அவருடைய சட்டை, செருப்பு  என அனைத்தும் இருந்ததைக் கண்டு, "நான் நைனாவாகவே மாறப் போகிறேன்" என கூறிக் கொண்டிருந்தார். அவர் இவ்வாறு சொன்னதை செய்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

அப்படியாக, அந்த நாள் மதுமிதாவின் 'ரயிலில் வடை விற்பது எப்படி?' என்ற வகுப்புடன் துவங்குகியது. மதுமிதாவை விட செரின், "வுட் யூ லைக் சம் வடை?" என வடை விற்றதுதான் அழகு. 

5nf1gdeo

இந்த வாரம் பிக் பாஸ் நமினேஷன் விஷயத்தில் தாமதம் எதையும் ஏற்படுத்தவில்லை. கலை 10:25 மணிக்கே நாமினேஷனை துவங்கிவிட்டார். சென்ற வார கேப்டன் சாக்க்ஷியிடமிருந்து துவங்கிய வாக்குப்பதிவு, இந்த வார கேப்டன் ரேஷ்மாவிடம் முடிவடைந்தது.

அனைவரும் இவர்களைத்தான் நாமினேட் செய்வார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத நாமினேஷன் கவின், சாக்க்ஷியை நாமினேட் செய்தது. தர்ஷன், கவினை நாமினேட் செய்தது. முகேன், மதுமிதாவை நாமினேட் செய்தது என இவை சற்று எதிர்பாராததே. மற்றபடி, அனைத்து நாமினேஷன்களும் எதிர்பார்த்ததே!

rikdjct8

இந்த வார நாமினேஷனில் இவர்களின் எதிர்பார்த்த ஒன்றுதான், 5 வாக்குகளுடன் கவின், 7 வாக்குகளுடன் சாக்க்ஷி. கவின் பெண்களின் உணர்ச்சியில் விளையாடுகிறார் என்பதற்காக அவருக்கு அந்த ஓட்டுகள். சாக்க்ஷிக்கு சென்ற வாரம் மீராவுடன் நடந்த பிரச்னையால் வாக்குகள் விழும் என எண்ணிய நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என பலர் வாக்களித்திருந்தனர். இது சற்று எதிர்பாராத ஒன்றுதான். அடுத்ததாக செரின், சரவணன், மீரா. இது வாரம் வாரம் வழக்கமாக இணையும் பெயர்கள்தான். மற்றொரு எதிர்பாராத நாமினேஷன் 4 வாக்குகளுடன் அபிராமி. இதுவும் சற்று எதிர்பாராத ஒன்றுதான். சென்ற வாரம் 11-ஆக இருந்த மீராவின் வாக்கு, இந்த வாரம் 4. எல்லாம் கமல் போட்டுக்காட்டிய குறும்படத்தின் மகிமை போல. 

கமல்தான் அவ்வப்போது சொல்வார், 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என. அது இந்த வார நாமினேஷனில் மெய்யாகிவிட்டது.

5hbrr1i

நாமினேஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, லாஸ்லியா கவினிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். நாமினேஷன் பெயர்கள் அறிவித்த பின்னர், "எதுக்கு சாரி கேட்ட?" என கவின் வினவ, அன்று கவின் நடிப்பதாக சொன்னதற்காக லாஸ்லியா மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

கிச்சனில் ஹார்ட் வடிவ சப்பாத்தி செய்து அட்ராசிட்டி செய்துகொண்டிருந்த சாண்டி, பின் வெளியில் கவினுடன் சேர்ந்தபின், நைனாவிற்காக மீண்டும் பாட்டுப்பாட துவங்கிவிட்டனர். 

umc1gse

இன்றைய பிக் பாஸில் பலமுறை துப்பாக்கி சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இந்த துப்பாக்கிகள் மீரா, லாஸ்லியா என அனைவரின் துக்கத்தையும் பறித்துக்கொண்டது. அனைவரும் தூங்குவதை கண்டு கடுப்பான பிக் பாஸ், வீட்டு கேப்டன் ரேஷ்மாவை அழைத்துக் கண்டிக்கிறார். ஆனாலும் இது தொடர்ந்தவாரே இருக்கிறது. 'வீட்டுகுள்ள தூங்குனாதான்டா சுடுவீங்க' என லாஸ்லியாவும் அபிராமியும் கார்டன் ஏரியாவில் படுத்து உறங்குகிறார்கள். அங்கு தூங்கினாலும் சுடுவோம் என பிக் பாஸ் சுட, இந்த முறை கடுப்பானது கேப்டன் ரேஷ்மா.

சாண்டி, வீட்டிற்குள் சென்றும் சற்றும் கூட மாறவில்லை. வெளியில் இருந்தபோது எப்படி அனைவரின் செயல்களையும் இமிடேட் செய்தாரோ, உள்ளேயும் அவ்வாறு இமிடேட் செய்தவாரே இருக்கிறார். இந்த தூங்கும் பிரச்னை முடிய, மோகன் வைத்தியாவின் உடைகளை அணிந்த சாண்டி அப்படியாகவே மோகன் வைத்தியாவாகவே மாறிவிட்டார். அப்படியே மோகன் வைத்தியாவின் ஒவ்வொரு செயல்களையும் கச்சிதமாக இமிடேட் செய்தார் சாண்டி. அவர் வறுந்துவதிலிருந்து, கவினிடம் காட்டிய கோவத்திலிருந்து, அனைத்தையும் அற்புதமாக இமிடேட் செய்தார். ஒரு கேள்வி, அவரின் சின்ன சின்ன விஷயங்களையும், செய்கைகளையும் இவ்வளவு உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்களா சாண்டி?

6d7s0k6o

நிச்சயமாக, இந்த நாளின் க்யூட் மொமென்ட் இதுவாகத்தான் இருக்கும். சாண்டி அவ்வாறு இமிடேட் செய்து அனைவரையும் சிரிப்பில் மூழ்கவைத்துக் கொண்டிருக்க, இருவர் மட்டும் எந்த ஒரு ரியேக்‌ஷனும் இன்றி வாய்மீது விரல் வைத்தபடி அமர்ந்து கொண்டிருந்தனர். வேறு யாரும் இல்லை, லாஸ்லியாவும் அபிராமியும்தான். கண்டிப்பையும் மீறி உறங்கியதற்கான தண்டனை போல. 

6mkgqpbo

"என்னடா இது இன்னைக்கு நாள் அவ்வளவு மொக்கையாவா போகுது, எல்லாரும் படுத்து தூங்குறாங்களே!" என பிக் பாஸ் யோசித்திருப்பார் போல. "பாட்டுப் பாடவா! பார்த்துப் பேசவா!" என ஜெமினி கனேசனின் பாடல் வரிகளில் ஒரு டாஸ்க் ஒன்றை அறிவித்தார். நான் ஜெமினி கனேசனை நினைவு கூர்வதற்கு காரணம் இருக்கிறது. 

இந்த டாஸ்க் என்னவென்றால், சீட்டுகள் நிறைந்த பவுல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் தமிழ் சினிமாவின் பாடல்களும் மற்றொன்றில் பன்ச் டயலாக்குகளும் இடம் பெற்றுள்ளன. வீட்டு உறுப்பினர்கள் ஒருவரின்பின் ஒருவராக வந்து முதலில் பாடல் வரிகள் உள்ள பவுலில் ஒரு சீட்டை எடுத்து அந்தப் பாட்டு யாருக்கு பொருந்தும் என சொல்லி அந்த பாட்டை பாடிக்காட்ட வேண்டும். பின் டயலாக் பவுலில் இருந்து ஒரு சீட்டை எடுத்து அதைப் படித்து, ஒருவேளை அதில் சமரப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தால், அந்த டயலாக்கை ஒருவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் சவால் என்று இருந்தால், ஒருவருக்கு சவால் விட வேண்டும். இந்த டாஸ்க்கை சினிமா பாணியில் செய்து காட்ட வேண்டும்.

4eusi1

முதலில் வந்த மீராவிற்கு,"அதிகமா ஆசப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது" என்ற சூப்பர் ஸ்டாரின் டயலாக். இதை மீரா, கவினுக்கு சமர்பித்துவிட்டார். கவின் அதிக பெண்களுக்கு ஆசைப்படக்கூடாது என அறிவுரை வேறு. அடுத்து வந்த சாண்டி, "என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பாக்க பாக்கதான் பிடிக்கும்" என்ற டயலாக்கை கவினிற்கு சமர்ப்பித்து ரிவிட் கொடுத்தார். இருவருக்கும் இடையில் வந்த கவினிற்கு வந்த பாடல் என்ன தெரியுமா, "நீயா பேசியது! என் அன்பே நீயா பேசியது!". அந்த பையனே குழி தோண்டி பொதச்சாலும், நீங்க அந்த குழிய மறுபடியும் தோண்டி வெளிய எடுத்துட்டு வருவீங்க போல பிக் பாஸ். இருந்தாலும், இதுக்கெல்லாம் அசறாதீங்க கவின். முகேன் சீட்டெடுக்க, வந்த பாடலோ, "மரணம் என்னும் தூது வந்தது, அது மங்கை என்னும் வடிவில் வந்தது". அந்த பாடலை மீராவிற்கு டெடிகேட் செய்துவிட்டார். அடுத்து அபிராமிக்கு வந்த பாடல் என்ன தெரியுமா, "கட்டிப்பிடி கட்டிப்பிடிடா" பாட்டு. இதை முகேனிற்கு என அபிராமி கூறுகிறார். 

pebeqqig

நான் காதல் மன்னனை நினைவு கூர்ந்ததற்கான காரணம் இப்போது புரிந்திருக்குமே. அது ஒண்ணும் இல்ல பிக் பாஸ், நீங்க இந்த மாதிரி ஜெமினி கனசன் பாட்டுல தலைப்பு வைக்கணும், அதுல இவங்களுக்கு இப்படி எல்லாம் பாட்டு வரணும், அதை அவங்க இவங்களுக்கு எல்லாம் டெடிக்கேட் பண்ணனும்னு டிசைன்ல இருக்கு!

லாஸ்லியா பேக் டூ 'நார்மல் மோட்', ஏன்னா, இன்னைக்கு பாட்டு பாடி டேன்ஸ் எல்லாம் ஆடுனாங்களே.

யார் எப்படி வேனாலும் போங்கடா என, சாண்டி, கவின், முகேன், நீச்சல் தொட்டியின் நடுவில் அமர்ந்து பாட்டுப் பாடிக்கொண்டிருக்க, பிக் பாஸின் 29வது நாள் முடிவடைகிறது.

பிக் பாஸ் வீட்டில் சண்டை இல்லாத நாட்கள் என கேட்டால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியான ஒருநாள்தான் இன்று. ஒரு வாரத்திற்குப்பின் பிக்பாஸ் வீட்டில் 'சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியது'. இந்த நிலை வரும் நாட்களில் தொடருமா?

-சு முரளி

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்