முகப்புகோலிவுட்

'இந்தியன் 2' மீண்டும் துவங்குகிறது, அறிவிப்பு வெளியிட்ட பிக் பாஸ்!

  | August 13, 2019 13:55 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

 • கமல் திரை உலகில் 60 ஆண்டுகளை கடந்துள்ளார்
 • பிக் பாஸ் வீடு தனது 50 நாட்களை கடந்தது
 • இரண்டையும் கொண்டாடும் வகையில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் முதல் நாள் மன்னர் சாண்டியின் குறைகேட்பு கூட்டத்துடன் சிறப்பாகவே துவங்கியது. அதன்பின் நாமினேஷன், அபிராமி- முகேன் பிரச்னை என வீடு கவலையில் மூழ்கினாலும், அதை மீட்டெடுக்கும் வகையில் பிக் பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

"இன்று கமல்ஹாசன் என்னும் மிகப்பெரிய கலைஞன் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் முடிவடைகின்றன. இன்றைய நாளில் ஒரு பிரமாண்ட சினிமா துவங்க இருக்கிறது, 'இந்தியன்-2'. சமுக சீர்திருத்த திரைப்படங்களில் 'இந்தியன்' முக்கியமான பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றில் 60 ஆண்டுகள் கடந்த சில கலைஞர்களில் கமல் சாரும் ஒருவர் என்பது நாம் அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய விஷயம்" என்று பிக் பாஸ் அறிவித்தார். அதன்பின், இந்தியன்-2 திரைப்படத்தின் கமலுடைய சில புகைப்படங்களை காட்சிப்படுத்தினார் பிக் பாஸ்.

இதன்பின் பேசிய கஸ்தூரி, 'இந்தியன் திரைப்படம் எனக்கு ஒரு முக்கியமான திரைப்படம், சினிமா பாதையில் எனக்கு ஒரு முக்கியமான மைல்-கல்' என்று குறிப்பிட்டார்.
"உலக நாயகனுக்கு என பாடல் எழுதிய போது 'நீ பாத்தது எல்லாம் ஒன்னுமில்லடா ஃபர்ஸ்ட் இன்னிங்ஸூ, இனிமேல் தான் இருக்குதுடா செக்கண்ட் இன்னிங்ஸூ' என்ற பாடல் வரிகளை யோசித்தோம். அப்படியான செக்கண்ட் இன்னிங்ஸிற்கு இந்த படம் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்'' என்றார் கவின்.

சாண்டி,"அவருக்கு இணை அவரேதான். அவரைப்பற்றி சொல்ல வயதும் இல்லை, தகுதியும் இல்லை. எப்போது கமல் சார் வேற லெவல் தான், அரசியல், பேசுவது என அனைத்துலையும் அவர் வேற லெவல்தான்'' என்றார்.

'கமல் சாரோட படங்களை பார்த்துதான் நான் வளந்தேன். கமல் சார்தான் என்னுடைய முன்னோடி' என்றார் தர்ஷன்.

"நமக்கான முன்னோடி கலைஞனாக நான் அவரை பார்க்கிறேன். வாழ்க கமல் சார்", என சேரன் வாழ்த்தினார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com