முகப்புகோலிவுட்

பிக் பாஸ் அல்ல, கவினிற்கு லாஸ்லியா அளித்த டாஸ்க், என்ன தெரியுமா?

  | July 10, 2019 14:44 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

 • 3 வது வாரத்தில் புதிய லக்சரி பட்ஜெட் டாஸ்க்
 • இந்த டாஸ்கில் வனிதா, முகேன் கொலையாளிகள்
 • இந்த டாஸ்கை செய்ய வனிதாவிற்கு ஒரு மொபைல் அளிக்கப்பட்டுள்ளது
3 வது வாரத்தின் 'பிக் பாஸ்' - லக்சரி பட்ஜெட் டாஸ்க் நேற்று துவங்கியது. வீட்டிற்குள் கொலைகாரர்கள் நுழைந்துவிட்டார்கள் என கூறியிருந்த பிக் பாஸ், வனிதா (Vanitha) மற்றும் முகேன் (Mugen Rao) ஆகியோர் காதுகளில் மட்டும் நீங்கள் தான் அந்த கொலையாளிகள் என கூறியிருந்தார். வனிதாவின் கைகளில் ஒரு மொபைல்போனையும் அளித்திருந்தார். அதன் வழியாகத்தான், பிக் பாஸ் வனிதாவிற்கு தகவல்களை பரிமாற்றுவார்.

அந்த மொபைல்போன் வழியாக, யாரை கொல்ல வேண்டும், எப்படி கொல்ல வேண்டும் என்பதை பிக் பாஸ் கூறுவார். பிக் பாஸ் ஒரு செயலை சொல்வார். இவர்கள் இருவரும் சேர்ந்த சமந்தப்பட்டவர்களை அந்த செயலை செய்ய வைத்துவிட்டால், அவர்கள் கொல்லப்பட்டதாக அர்த்தம். 

இந்த சம்பவத்தில் முதலில் சிக்கியது சாக்ஷி (Sakshi Agarwal). அவராகவே, அவருடைய மேக்-அப்பை கலைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். ஹாலோவின் வேடம் அணிந்து கொள்வோம் என அனைவரையும் அழைத்த வனிதா, சாக்ஷியின் கைகளினாலேயே, அவருடைய மேக்-அப்பை அகற்ற வைத்துவிட்டார். முதல் கொலை வெற்றிகரமாக அறங்கேறியது.
இரண்டாவதாக, மோகன் வைத்தியா (Mohan Vaidya), அவரை மைக்கெல் ஜேக்சன் போன்று நடனமாட வைக்க வேண்டும் என்பது டாஸ்க். இந்த முறை முகேனின் உதவியுடன் இதை நடத்தி முடித்தார், வனிதா.

இரவு எட்டியவுடன், தற்காலிகமாக இந்த டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லாஸ்லியா கவினிற்கு ஒரு டாஸ்க் அளித்துள்ளார். அது என்ன வென்றால்,'இன்று முழுவதும் லாஸ்லியாவை கவின் பார்க்கக்கூடாது' என்பதுதான்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com