முகப்புகோலிவுட்

“நிச்சயம் நடந்தது உண்மைதான், ஆனால் நான் ஏமாற்றவில்லை” சனம் அளித்த புகாருக்கு தர்ஷன் மறுப்பு..!

  | February 01, 2020 14:21 IST
Dharshan

சனம் ஷெட்டி தன் மீது அளித்துள்ள புகாருக்கு மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார் தர்ஷன்.

சனம் ஷெட்டி தன் மீது அளித்துள்ள புகாருக்கு மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார் தர்ஷன்.

நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தின் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னுடன் நிச்சயம் செய்துவிட்டு, திருமனம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும், தன்னை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும், தன்னை அவமானப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்காக கிட்டத்தட்ட ரூ. 15 லட்சத்திற்கும் மேலாக செலவழித்திருப்பதாகவும் செய்தியாளர்களுடனான பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தர்ஷன் சனம் ஷெட்டியில் புகார்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் தன் தரப்பு தகவலளை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது “நான் இலங்கையில் என்னுடைய பைக்கை எல்லாம் விற்று, பட வாய்ப்பு தேடி 2016-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தேன், ஒரு ப்ரொடக்‌ஷன் கம்பெனியில் 6 மாதங்கள் வேலை செய்தேன். பிறகு பல ஆடிஷன்களுக்கு சென்று சில விளம்பரப் படங்களில் நடித்தேன், பிறகு 3 படங்களில் சிறு வேடங்களில் நடித்தேன், பிறகு ஒரு படத்தில் முழு நீளக் கதாப்பத்திரமாக வில்லனாக நடித்துவந்தேன். அப்போது பிரபல துணிக்கடை விளபரத்தில் நடிக்கும் போது தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “சனம் சென்னது போல நாங்கள் காதலித்தோம், ஆனால் தனக்கு 2 படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளதால், நம் காதல் விஷயத்தை இப்போது வெளியே சொல்லவேண்டாம் என்று அவர் தான் சொன்னார்” என்றார்.

அதேபோல் “நிச்சயம் நடந்ததும் உண்மைதான், அதையும் அவர் தான் வெளியே சொல்லவேண்டாம் என்றார். ஏனென்றால் நாங்கள் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்தோம், கல்யாண ஆகப் ஓவது தெரிந்தால், பட வாய்ப்புகளும் வராது, அதேபோல் பிக் பாஸ் ஆடிஷனுக்கு நம்மை கன்சிடர் செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தான் கூறினார். அனால், அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்கவில்லை, எனக்கு அந்த  தொலைக்காட்சியே எனது விளம்பரப் படத்தைப் பார்த்துவிட்டு, என் நன்பர்கள் மூலமாக அழைப்பு விடுத்தார்கள்” என்றார்.

அதேபோல், அவர் தனக்கு செலவழித்ததாகச் சொன்ன தொகை பொய் என்றும், நிச்சயதார்த்தத்துக்காக இரண்டரை லட்சமும், எனக்கு வரி செலுத்துவதற்காக மூன்றரை லட்சம் மட்டுமே செலவழித்ததாக கூறினார். “அதிலும், அந்த மூன்றரை லட்சம் பணத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்து அதில் வந்த தொகை மூலம் திருப்புக் கொடுத்து விட்டேன், நிச்சயத்துக்காக செலவழித்த பணம் மட்டுமே கொடுக்கவில்லை, மற்றபடி வேறு எந்த செலவும் அவர் எனக்காக செய்யவில்லை, என்னுடைய மற்ற செலவுகளுக்கு என் அண்ணன் மற்றும் அம்மா அனுப்பும் பணம் மற்றும் விளம்பரங்களில் நடிப்பது மூலம் எனக்கு கிடைக்கு சம்பளம் எனக்கு இருந்தது” என்றார்.

மேலும் பேசிய தர்ஷன், சனம் தான் தன்னை துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். அதாவது, பிக் பாஸ் முடிந்து வந்தப் பிறகு படங்களில் நடிக்க விடாமல், நடிக்க வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சென்று தவறாகக் கூறி, பட வாய்ப்புகளை கெடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்லவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக மிறட்டி, இப்போது தன் மீது புகார்களை அளித்து வருவதாகவும்  கூறினார். “பிக்பாஸ் நிகச்சியில் பங்குபெற்று புகழடைந்த பிறகும் படவாய்ப்புகள் இல்லாமல் இருப்பதற்கு சனம் தான் காரணம்” என்று கூறுகிறார் தர்ஷன்.

கடைசியாக “விசாரணை என்று வரும்போது எனக்கு சாதகமான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன், நாங்காள் இருவரும் கலந்து பேசி தான் இந்த பிரிவிற்கான முடிவை முன்னதாகவே எடுத்தோம்” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com