முகப்புகோலிவுட்

பிகில் இசை வெளியீட்டு விழா! சென்னையை ஸ்தம்பிக்கவிடும் விஜய் ரசிகர்கள்....

  | September 19, 2019 18:12 IST
Thalapathy

துனுக்குகள்

  • இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது
  • சாய்ராம் கல்லூரியில் இந்த விழா நடைபெறுகிறது
  • இந்திய அளவில் பிகில் இசை வெளியீட்டு விழா டிரெண்டாகி வருகிறது
பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் சாய்ராம் கல்லூரி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
 
அட்லி இயக்கத்தில் விஜய் தனது 63வது படத்தை நடித்துள்ளார். பிகில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், விவேக், என இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை மணி அளவில் சாய்ராம் கல்லூரியில் நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். விழா நடக்கும் சாய்ராம் கல்லூரிக்கு விஜய் தன் காரில் வரும் வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் விழா நடக்கும் சாய்ராம் கல்லூரி பகுதியில் ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கார், பைக் என விஜய் ரசிகர்கள் விழா நடக்கும் இடத்தை நோக்கி நகரும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
மேலும் இசைவெளியீட்டு விழாவை முன்னிட்டு ட்விட்டரில் பிகில் ஆடியோ லான்ச் #Bigilaudiolaunch ஹேஷ் டேக் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்