முகப்புகோலிவுட்

விஜய்க்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடை! என்ன பேசப்போகிறார் விஜய்!!

  | September 19, 2019 17:14 IST
Bigil

துனுக்குகள்

 • சாய் ராம் பொறியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடை பெறுகிறது
 • இவ்விழாவில் அரசியல் குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 • இந்த விழா இன்று மாலை 6மணிக்கு நடைபெறவிருக்கிறது
(Atlee, Vijay )அட்லி விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சாய் ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் திரை நட்சத்திரங்கள் விஜய்(Vijay) ரசிகர்கள் பலர் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள்.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் விஜய் பேச்சு பரவலாக பேசப்பப்பட்டது. இன்று நடைபெறவிருக்கின்ற இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். விஜய் பேசவிருக்கும் மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
  
கடந்த ஆண்டு மெர்சல் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், “எதிர்மறையான விஷயங்களை தவிர்த்துவிடுங்கள். கத்தி கத்தி பாத்துட்டு அவங்களே விட்டுடுவாங்க. அதேநேரத்தில இந்த உலகத்துல அவ்வளவு ஈசியா நம்மல வாழவிட்டுட மாட்டாங்க. போட்டு ஒருவழி பண்ணுவாங்க. அதையெல்லாம் தாண்டி தான் நாம வந்தாகனும்” என்று கூறி குட்டிக் கதை ஒன்றை கூறினார்.
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய், சர்கார் பட இசைவெளியீட்டு விழாவில் பேசியதும் கவனம் பெற்றது. சர்கார் விழா மேடையில் பேசிய விஜய், கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று கூறினார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தேர்தல் போட்டியிட்டு ஜெயிச்சு சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைச்சுட்டு தேர்தலில் போட்டியிடப் போறோம் என்றார். அப்போது அரங்கமே அதிர, நான் படத்தைச் சொன்னேன் என்றார் விஜய். இதையடுத்து மேடையில் பிரசன்னாவின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய், நிஜத்தில் முதலமைச்சரானால் முதலமைச்சரா நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்றார். தொடர்ந்து ரசிகர்களுக்கும் ஒரு குட்டிக் கதை சொல்லி தனது பேச்சை முடித்தார். அரசியல் அரங்கில் விஜய்யின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது, விவாதப்பொருளாகவும் மாறியது. இதனை அடுத்து இன்று நடக்கக்கூடிய ‘பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் குறித்து எதாவது பேசுவாரா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பார்க்கத்தேனே போறோம்!!!
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com