முகப்புகோலிவுட்

பிகில் பட நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் ப்ரொபோஸ் செய்த பிரபலம்..!

  | November 07, 2019 14:22 IST
'bigil'

துனுக்குகள்

  • இந்துஜா விஜயின் ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • பிகிலை அடுத்து விஜய் ஆண்டனியின் ‘காக்கி’ படத்தில் நடிக்கிறார்.
  • இவர் வைபவ் நடித்த மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமானார்.
பிகில் படத்தில் நடித்த இந்துஜாவிடம் இன்ஸ்டாகிராமில் “என்னை கல்யானம் செய்துகொள்வாயா?” என பிரபலம் ஒருவர் கேட்டுள்ளார்.

நடிகர் வைபவுக்கு தங்கச்சியாக நடித்து ‘மேயாத மான்' திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர், மெர்க்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விஜய்-நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிகில்' திரைப்படத்திலும் இந்துஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது, விஜய் ஆண்டனியின் காக்கி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் இவர், சமூக வலைதள பக்கங்களில் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மிக அழகாக தோற்றமளிக்கும் இந்த புகைப்படங்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இந்துஜாவின் போஸ்ட்டுக்கு சினிமா பிரபலம் ஒருவர் “என்னை திருமனம் செய்து கொள்வாயா” என ரிப்ளை செய்துள்ளார். அவர் வேரு யாருமல்ல, ‘சாட்டை' பட நாயகி மஹிமா நம்பியார் தான். அவர் மொசக்குட்டி, என்னமோ நட்க்குது, குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அன்னனுக்கு ஜே, மகாமுனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மஹிமா நம்பியாரின் ரிப்ளைக்கு, இந்துஜா உடனடியாக “காதலே வா, உடனடியாக திருமனம் செய்துகொள்ளலாம்” என கேளியாக பதிலளித்துள்ளார். இந்த போஸ்ட்டுக்கு கீழே ‘காதல் கண் கட்டுதே' பட நாயகி அதுல்யா ரவி “I m waiting” என கிண்டலால ரிப்ளை செய்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்