முகப்புகோலிவுட்

பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு! விவரம் இதோ!

  | October 15, 2019 17:28 IST
Bigil

துனுக்குகள்

  • நாளை இந்த வழக்கை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்
  • கே.பி. செல்வா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்
  • வரும் தீபாவாளி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்
வரும் தீபாவளி அன்று விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் "பிகில்". நயந்தாரா, கதிர், யோகிபாபு, விவேக், இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ள இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலெர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறதும். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவருடைய படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்பது நான் அனைவரும் அறிந்ததே. அதே வேலையில் விஜய் படங்களுக்கு சமீப காலமாக சிக்கல்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் பல்வேறு தடைகளை கடந்து படம் வெளியாகி வரவேற்பை பெறுகிறது. இப்படியான சூழல் " தலைவா" படத்தில் இருந்தே நீண்டு வருகிறது. 

தற்போது பிகில் படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அட்லியின் இயக்கிய தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் மீது கதை திருட்டு அல்லது சுட்ட கதை என பல்வேறு விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதையும் பார்க்க முடிகிறது இப்படியான சூழல்களை கடந்தே ஒவ்வொரு முறையும் அட்லி வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது பிகில் எதிர்கொள்ளும் சவாலும் இம்மாதிரியான விஷியமே. 

இயக்குநர் செல்வா என்பவர் பிகில் படம் தன்னுடைய கதை என்று கூறி உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தற்போது உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழம்க்கை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.நீதி யார் பக்கம் என்பதை பெருத்திருந்தே பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் கதை திருட்டு தொடர்பான புகார்கள் சமீப காலத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்