முகப்புகோலிவுட்

“கதையை திருடி 'பிகில்' படம் எடுக்கப்பட்டுள்ளது”- தடை கோரி உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் வழக்கு!

  | October 15, 2019 11:40 IST
Bigil

துனுக்குகள்

  • வரும் தீபாவளி அன்று பிகில் படம் வெளியாக இருக்கிறது
  • கதை திருட்டு வழக்கு இன்று விசாரனைக்கு வருகிறது
  • கே.பி.செல்வா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்
பிகில் படத்தின் கதை தன்னுடையது எனவும் இந்த படத்திற்கு தடை கோரியும் இயக்குநர் கே.பி.செல்வா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
 
விஜய் நடிப்பில் நயன்தாரா, யோகி பாபு, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பிகில். தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்றாவது முறையாக இயக்கி இருக்கிறார் அட்லி.
 
‘தலைவா' படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு தொடர்ந்து பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசியல் குறித்த விமர்சனங்கள் விஜய் படங்களில் இடம் பெறுவதால் இந்த எதிர்ப்பு இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கதை திருட்டு என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்த நடைபெற்று வரும் இன்னொரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பல்வேறு திரைப்படங்களுக்கு கதை திருட்டு வழக்கு வழக்காடு மன்றம் சென்று திரும்புவதை அதிகம் பார்க்க முடிகிறது.
 
சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியை சார்ந்த பலர் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து தற்போது பிகில் படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
 
படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில் இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்