முகப்புகோலிவுட்

'BIGIL’ அர்ச்சனா கல்பாதியின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  | October 18, 2019 17:03 IST
Bigil

ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் 'BIGIL' சென்னையின் எப்சி ஆகிய பெயர் கொண்ட ஜெர்ஸியை அவர் அறிமுகம்

துனுக்குகள்

  • பிகில் திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது
  • பிகில் படக்குழு ஒரு பிரம்மாண்ட கால்பந்து விளையாட்டை நடத்த திட்டம்
  • பிகில் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்
சென்னையின் எப்சி கால்பந்து அணியுடன் இணைந்து பிகில் படக்குழு ஜெர்ஸியை அறிமுகம் செய்துள்ளது.
 
அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 25ம் நாள் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் விஜய்-நயன்தாரா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, இந்துஜா, கதிர் இன்னும் பலர் நடித்துள்ளார்.
 
பெண்கள் கால்பந்தாட்டத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்ட கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாட்டு படமாக்கப்பட்டிருக்கிறது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரில் அதை பார்க்க முடிந்தது. படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில், இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'பிகில்' படத்தின் தயாரிப்பு நிறுவனமும் சென்னையின் எப்சி கால்பந்து அணியில் இணைந்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் சென்னையின் எப்சி ஆகிய பெயர் கொண்ட ஜெர்ஸியை அவர் அறிமுகம் செய்துள்ளார். சென்னையில் ஒரு மிகப்பெரிய கால்பந்து போட்டியை நடத்தவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
   
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்