முகப்புகோலிவுட்

“பிகில்” படம் சிறப்பு காட்சி ரத்து! மீறினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை - கடம்பூர் ராஜு அதிரடி

  | October 22, 2019 16:11 IST
Bigil

துனுக்குகள்

 • பிகில் சிறப்பு காட்சி ரத்து என அறிவிப்பு
 • கைதி படத்தின் சிறப்பு கட்சியும் ரத்து என தகவல்
 • அதிக கட்டண கொள்ளையை தடுக்க இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
பிகில் படம் மட்டுமல்ல தீபாவளி அன்று வெளியாகும் எந்த படத்திற்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிகில்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. பண்டிகைக்கால விடுமுறையை கருத்தில் கொண்டு இப்படம் வரும் 25ம் தேதி வெளிவரவிருக்கிறது.
 
இதே போல் ‘மாநகரம்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி' படமும் இதே நாளில் வெளியாக இருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பதால் இவ்விரு படங்களுக்கு சிறப்பு காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தீபாவளி அன்று வெளியாகும் எந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவித்துள்ளார். மேலும் பேசியிருந்த அவர்.
 
பண்டிகைகாலங்களில் வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகள் மூலம் திரையரங்குகள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக பல்வேறு தரப்பினரிடையே புகார்கள் வந்தததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிக கட்டண வசூலை தடுக்கவே இந்த முடிவு அறிவித்திருப்பதாக தொரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com