முகப்புகோலிவுட்

“பிகில்” படத்தின் வெறித்தனமான அப்டேட்! விஜய் ரசிகர்களுக்கு படக்குழு அளித்த விருந்து!

  | July 08, 2019 18:52 IST
Bigil Movie

துனுக்குகள்

  • அட்லி இப்படத்தை இயக்கி வருகிறார்
  • ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்
  • ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
தெறி, மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி- விஜய் மூன்றாவது முறையாக அமைத்திருக்கும் கூட்டணி ‘பிகில்'. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
 
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் கதிர், யோகி பாபு, ஆனந்த் ராஜ் இன்னும் பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் பற்றிய புதிய அறிவிப்புகள் அவ்வப்போது வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது, அதன் அடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு இன்று காலை அறிவித்திருந்தது.
 
அதன்படி பிகில் படத்தின் முதல் பாடலான வெறித்தனம் பாடலை  விஜய் பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட போது அட்லி, விஜய், ஏ.ஆர். ரகுமான், பாடலாசிரியர் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்