முகப்புகோலிவுட்

வெறித்தனமான பிகில் டிரெய்லர்! 

  | October 14, 2019 11:49 IST
Bigil

துனுக்குகள்

  • தீபாவளி அன்று பிகில் வெளியாக இதுக்கிறது
  • இரு வேடங்களில் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளார்
  • இன்று வெளியான பிகில் டிரெய்லர் டிவிட்டரில் சாதனை படைத்து வருகிறது
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பிஜில் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன் படி இன்று மாலை 6மணிக்கு டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த ட்ரெய்லெரில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அட்டகாசமான தோற்றம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. முன்னதாக கூறியபடி விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக களத்தில் இறங்கி இருக்கிறார். பிரண்மாண்டமாக அமைக்கப்பட்ட கால் பந்தாட்ட மைதானம் பிரம்மிக்க வைக்கிறது.

மொத்தத்தில் டிரைலர் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே  வெறித்தனமாக அமைந்திருக்கிறது. தற்போது வைரலாகி வரும் டிரெய்லர் படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசை டிரெய்லரை அதிர வைக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நயந்தார நடிக்க இப்படத்தில் யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். வரும் தீபாவளியை குறிவைத்து பிகில் களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்