முகப்புகோலிவுட்

கேரளா-ஆந்திரா- தெலுங்கானாவில் “பிகில்”! தென்னிந்தியாவை கலக்கவிருக்கும் தளபதி!

  | October 21, 2019 14:35 IST
Vijay

துனுக்குகள்

 • வரும் 25ம் தேதி இப்படம் வெளியாகிறது
 • நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களில் ரிலீஸாகவுள்ளது இப்படம்
 • இப்படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு வசூல் செய்துள்ளதாம்
 
பிகில் திரைப்படம் ப்ரீ பிசினஸில் மட்டும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
 
‘தெறி', ‘மெர்சல்' படங்களைத் தொடர்ந்து அட்லி(Atlee) இயக்கத்தில் விஜய் (Vijay)மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘பிகில்' BIGIL. இப்படித்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா (Nayanthara) நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு (Yogi babu), கதிர் (Kathir), விவேக் (Vivek), இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. வரும் 25ம் தேதி இப்படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. மேலும் இன்று பிகில் படத்திற்காக முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் விஜய்யின் 'பிகில்' படம் வரும் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும் பட்சத்தில், இப்போது ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது. அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களில் ரிலீஸாகவுள்ளது.  இந்த செய்தி ரசிகர்களிடையே  பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com