முகப்புகோலிவுட்

“பிகில்” படத்தின் “சிங்கப்பொண்ணே” பாடல் லீக்; அதிர்ச்சியில் படக்குழு!

  | July 17, 2019 11:52 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

  • இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
  • பெண்கள் கால்பந்தாட்டத்தை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது
  • அட்லி - விஜய் கூட்டணியில் பிகில் 3வது படம்
அட்லி இயக்கி வரும் ‘பிகில்' படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
 
அட்லி- விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் ‘பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர் இன்னும் பலர் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.
 
இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் இப்படம் களம் இறங்க தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை முடித்து விட்டு போஸ்ட் புரெடக்ஷன் வேலைகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
 
இயல்பாகவே முக்கிய பிரபலங்கள் நடிக்கும் படம் என்றால் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெறும். தற்போது  இப்படத்தில் இடம் பெறும் சிங்கப்பெண்ணே என்கிற பாடல் இணையத்தில் லீக்காகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் எப்படி வெளியானது என படக்குழுவுனர் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்