முகப்புகோலிவுட்

ரஜினியை பின்னுக்கு தள்ளிய பிகில் அப்டேட்! ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!!!

  | September 11, 2019 18:02 IST
Bigil

துனுக்குகள்

  • இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது
  • தெலுங்கில் 400 தியேட்டர்களில் வெளியாகிறது இப்படம்
  • பிகில் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது இதனை ரசிகள் பகிர்ந்து தர்பார் ஹேஷ் டேக்கை இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாக்கினர்.
 
தற்போது தர்பார் ஹேஷ் டேக்கை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளத பிகில் ஹேஷ் டேக். அதற்கு காரணம் பிகில் படக்குழு வெளிட்ட அறிவிப்புதான். அப்படி என்ன அறிவிப்பு என்றால் பிகில் படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மகேஷ் கோனேரு ஈஸ்ட் கோஸ்ட் புரெடக்ஷென் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆந்திரா மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் 400 தியேட்டர்களில் பிகில் வெளியாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதனை  கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் பிகில் தெலுங்கு என்கிற ஹேஷ் டேக்கை இந்திய அளவில் முதலிடம் பெறச்செய்திருக்கிறார்கள்.    
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்