முகப்புகோலிவுட்

பிகில் படத்தின் புதிய அப்டேட்! விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து!

  | August 13, 2019 19:31 IST
Bigil Update

துனுக்குகள்

  • இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு
  • இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
  • பெண்கள் கால் பந்தாட்டத்தை மைய்யப்படுத்தி உருவாகி வரும் படம் இது
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அட்லி - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘பிகில்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் தற்போது சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர  ஹோட்டலில் நடைபெற்றது வருகிறது மேலும் இன்றுடன் தளபதி விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் நிறைவு பெறுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்க படத்தை வெளியிட இருப்பதால் இறுதிகட்ட பணிகள் படக்குழு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்