முகப்புகோலிவுட்

'கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் மில்டன்' - வாழ்த்துக் கூறி அப்டேட் சொன்ன சூர்யா..!!

  | July 12, 2020 13:29 IST
Vijay Milton

துனுக்குகள்

 • 1998ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் "ப்ரியமுடன்" திரைடபடத்தின்
 • கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, உள்ளிட்ட படங்கள் இவருடைய இயக்கத்தில்
 • இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சிவா அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள்
1998ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் "ப்ரியமுடன்" திரைடபடத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களமிறங்கிவர் தான் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு வெளியான "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக இவர் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, உள்ளிட்ட படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்கள் அன்பாக "சிவன்னா" என்று அழைக்கும் பிரபல கன்னட நடிகர் சிவா ராஜ்குமாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். சிவக்குமார் அவர்கள் பிரபல மூத்த நடிகர் ராஜ்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சிவா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறி இந்த படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் சூர்யா அவர்கள். லாக் டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com