முகப்புகோலிவுட்

திரையுலகில் ஹீரோவாக களமிறங்கும் யூடியூப் நட்சத்திரம்.!

  | August 07, 2020 23:55 IST
Ram Nishanth

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலம் பெற்ற நடிகர் உதயராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரபல ஆர்.ஜே மற்றும் காமெடி நடிகரான விக்னேஷ்காந்தின் பிரபலமான ‘பிளாக் ஷீப்' யூடியூப் சேனலின் நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர் ராம் நிஷாந்த். ‘ஃபன் பன்றோம்' எனும் கேளிக்கை நிகழ்ச்சி,  மற்றும் யூடுயூப் தொடர்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்ட அவர், பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் காணப்பட்டார். இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சின்னத்திரை நட்சத்திரம் ரியோ ராஜ் கதாநாயகனாக அறிமுகமானார்.

tokpvino

இப்போது, ‘நான் கோமாளி' ராம் நிஷாந்த் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின், தொடக்கப் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் ராம் நிஷாந்துக்கு வாழ்த்து குறிப்புகள் குவிந்துவருகின்றன.

g8mpein8

இந்த புதிய படத்தை பொதன்ராஜ்  இயக்குகிறார். ஹைலைட் சினிமாஸ் பேனரின் கீழ் பி.சிவகுமார் தயாரிக்கிறார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலம் பெற்ற நடிகர் உதயராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

4qdd2po8
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com