முகப்புகோலிவுட்

“இந்தியன் 2” படத்தில் கமலுக்கு வில்லனாகும் தேசிய விருது பெற்ற நடிகர்?

  | August 30, 2019 16:37 IST
Indian 2

துனுக்குகள்

  • சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது
  • பிரியா பவாணி சங்கர்,ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் நடிக்கிறார்கள்
  • விவேக் முதல் முறையாக கமலுடன் இப்படத்தில் நடிக்கிறார்
சங்கர் இயக்கி வரும் இந்தின் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அந்த நடிகர் யார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
 
ஊழல் செய்பவர்களை காலி செய்யும் சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் கமல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இந்தியன்'. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் இயக்கி வருகிறார். இதில் கமல் நாயகனாக நடிக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் சித்தார்த்,விவேக்,பிரியா பவாணி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
 
70bu3d7o

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கமலுக்கு வில்லனாக நடிக்கவைக்க பாலிவுட் நடிகர்கள் யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்திருந்தது படக்குழு அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் வில்லனாகத் தற்போது பாபி சிம்ஹா கமிட்டாகியுள்ளாராம். இதுவரை வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது பாபி சிம்ஹாவே வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.  என செய்திகள் வெளியாகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்