முகப்புகோலிவுட்

ஆர்யாவுக்கு ஜோடியான துஷாரா..! வடசென்னை பாக்ஸிங் பற்றிய கதை தான் ‘சல்பேட்டா’..!

  | March 19, 2020 14:43 IST
Salpetta Parambarai

கே9 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ‘சல்பேட்டா பரம்பரை'. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. மேலும் இப்படத்தில், ‘அட்ட கத்தி' தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றிய ஆர்யா, தனது புகைப்படங்களை “ரஞ்சித் சார் நான் ரெடி” என சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘போத ஏறி, புத்தி மாறி' எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துஷாரா வடசென்னை பெண்ணாக ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். இவர் விரைவில் திரைக்கு வரவுள்ள 'அன்புள்ள கில்லி' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கே9 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com