முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

  | July 20, 2019 15:22 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • சிவகாத்திகேயன் நடிப்பில் பி.எஸ் மித்ரம் இப்படத்தை இயக்குகிறார்
  • கல்யாணி பிரியதர்ஷனுக்கு சிவகார்த்திகேயனுடன் முதல் படம் இது
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
“இரும்புத்திரை” பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “ஹீரோ” என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அபய் தியோல் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 
மேலும்  நடிகர் அர்ஜூன், நடிகை இவானா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
இதைத் தவிற சிவகார்த்திகேயன் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 


 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்