முகப்புகோலிவுட்

நயன்தாராவைப் புகழ்ந்து தள்ளிய பாலிவுட் ஹாட் நடிகை..!

  | May 30, 2020 11:54 IST
Nayanthara

நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகை கத்ரீனா கைஃப். முன்னணி நடிகையாக இருக்கும் இவர் கடந்த ஆண்டு தனது சொந்த மேக்கப் உபகரணங்களுக்கான பிராண்டை ‘Kay Beauty' அறிமுகம் செய்துள்ளார். மேலும், அதற்கான விளம்பரத்தில் கத்ரீனா கைஃப் உடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்தனர். அவர்களில் தென்னிந்திய ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், கத்ரீனா கைஃப், “நான் நயன்தாராவை மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகக் கண்டேன், அதே போல் நான் அவரை மிகவும் வலிமையாகக் கண்டேன். அவர் ஒரு போராளியாக கடந்து வந்தவர். மேலும் அவரிடம் ஏதோ இருக்கிறது.. அவர் பணியாற்றும் விதத்தில்.. அவர் மிகச் சிறிய வயதிலிருந்தே பணிபுரிந்து வருகிறார், மிகவும் உன்னிப்பானவர். அவருடைய வேலை அவருக்குத் தெரியும், அவர் மிகவும் குறிப்பிட்ட நபர். நான் அதை எதிரொலித்தேன்" எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தில் நயன்தாரா கடைசியாக நடித்திருந்தாலும், மீண்டும் ரஜினியின் மற்றொரு படமான 'அண்ணாத்த' படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார். மேலும், மிலிந்த் ராவின் ‘நெற்றிக்கண்' மற்றும் ஆர்.கே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்கவுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com