முகப்புகோலிவுட்

"செமயா போர் அடிக்கிது" - டிக் டாக்கில் அசத்தும் நடிகை ஷெரின்

  | April 20, 2020 08:14 IST
Sherin

துனுக்குகள்

 • கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில மற்றும் மத்திய
 • அதே போல பல பிரபலங்களின் சிந்தனை இப்போது டிக் டாக் பக்கம்
 • தற்போது நடிகை ஷெரின் தன்னுடைய டிக் டாக் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில மற்றும் மத்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக தமிழ்நாடு அரசு மாநில அளவில் 144 தடை உத்தரவும், மத்திய அரசு 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. அதே போல சுகாதார அவசியம் கருதி அணைத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. 

இந்த நடவடிக்கையால் பல நடிகர் நடிகைகள் தங்களது வீடுகளில் குடும்ப நபர்களோடு தங்களது நேரத்தை செலவிட தொடங்கியுள்ளனர். அண்மையில் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர் கோலிவுட்டில் தனது முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படப்பிடிப்பு தளத்திலிருந்து (ooty) ஒரு த்ரோபேக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அதை “அனைத்து த்ரோபேக்குகளின் தாய்” என்று தலைப்பிட்டார். 

அதே போல பல பிரபலங்களின் சிந்தனை இப்போது டிக் டாக் பக்கம் திரும்பியுள்ளது. நடிகை த்ரிஷா, கிரண், நடிகர் சாந்தனு அவர் மனைவி கிக்கி என்று பலரும் தற்போது டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஷெரின் தன்னுடைய டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com