‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விசுவாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார்.
மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படுமாம். இந்நிலையில், படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் ‘போஸ்’ வெங்கட் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அஜித் நடித்திருந்த ‘வீரம்’ படத்தில் அதுல் குல்கர்னிக்கும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஆஷிஷ் வித்யார்த்திக்கும் போஸ் வெங்கட் டப்பிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.