முகப்புகோலிவுட்

“அண்ணன் ‘தளபதி’ விஜய்” என பிறந்தநாள் வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்..!

  | June 22, 2020 19:16 IST
Thalapathy Vijay

"நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணன் தளபதி விஜய்"

தமிழக அரசியலைப் பொருத்தவரை ‘தளபதி' என்றால், தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்பது தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும். அவரது மகனும், திரைப்பட தயாரிப்பளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணித் தலைவராகவும், கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இருந்துவருகிறார்.

சமீபத்தில், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த ‘சைக்கோ' திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்று, விமரசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

இன்று ‘தளபதி' விஜய் தனது 46-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அனைத்து சமூக ஊடக தளங்களும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், திரைத்துறையைச் சார்ந்த உதயநிதி ஸ்டாலினும், நடிகர் விஜய்க்கு தனதி ட்விட்டர் பகத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களால் ‘தளபதி' என அன்பாக அழைக்கப்படும் விஜய்க்கு, உதயநிதி ஸ்டாலின் அண்ணன் ‘தளபதி' விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளது பலருக்கும் ஆசரியத்தை கொடுத்துள்ளது. மேலும், நடிகர் விஜய் தான், தான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது தனது பதிவில் “நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கண்ணை நம்பாதே' மற்றும் ‘ஏஞ்சல்' என இரண்டு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com