முகப்புகோலிவுட்

'என்ன இப்படி பண்ணிட்டீங்க' - அடுத்த பட அறிவிப்பை 'வித்தியாசமாக' சொன்ன சிம்ரன்

  | February 22, 2020 08:22 IST
Simran

தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்த சிம்ரன்

துனுக்குகள்

 • அடுத்த பட அறிவிப்பை வித்யாசமாக சொன்ன சிம்ரன்
 • உருது மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்த சிம்ரன்
 • VIP படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார் சிம்ரன்
90's கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை சிம்ரன். இன்றளவும் இவரின் நடனத்திற்கு ஈடுகொடுக்கும் நடிகைகள் இல்லை என்றால் அது மிகையல்ல. 1997ம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியான VIP படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார் சிம்ரன். மேலும் அந்த படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான Film Fare விருதையும் தட்டிச்சென்றார். வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன் என்று பல படங்களில் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டர் சிம்ரன். 

ரஜினி, கமல், விஜய், அஜித் என்று இவர் இணைந்து நடிக்காத பிரபல நடிகர்களே இல்லை என்று கூறலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து சற்று ஓய்வு பெற்றார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை ரத்தம் வடியும் ஒரு போட்டோவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சில நொடிகள் அச்சத்தில் ஆழ்த்திவிட்டார் சிம்ரன். 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com