முகப்புகோலிவுட்

சரியான Time-ல Gun-னு குடுத்தது நானு..! - கெத்தாக பதில் அளித்த பிரபல நடிகர்..!

  | August 11, 2020 11:58 IST
Black Eyed Peas

துனுக்குகள்

 • 'Black Eyed Peas' இது உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவில் செயல்படும் ஒரு
 • எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் அவர்கள் ரோபோவாக மாறி சண்டையிடும் ஒரு
 • தக்க சயமத்தில் துப்பாக்கியை எடுத்து கொடுத்தது நான்
'Black Eyed Peas' இது உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவில் செயல்படும் ஒரு இசைக்குழு. இந்த இசைக்குழுவை சேர்ந்த ஒருவர் அண்மையில் தமிழகத்திலும் பல சுவாரசியமான வீடியோ-க்களை பதிவிட்டு பிரபலமாகி வருகின்றார். குறிப்பிட்ட காட்சிகளில் பிரபலங்களின் முகத்திற்கு பதிலாக தங்களுடைய முகத்தை மாற்றி காணொளியாக பதிவேற்றும் அந்த நநுணுக்கத்தின் மூலம் இவர் அண்மையில் இரண்டு வீடியோ-க்களை வெளியிட்டர். இதற்கு பல கலவையான விமர்சனங்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் அவர்கள் ரோபோவாக மாறி சண்டையிடும் ஒரு காட்சியையையும், ஆம்பள படத்தில் நடிகர் விஷால் அவர்களின் ஒரு சண்டைக்காட்சியையும் குறிப்பிட்ட செயலி மூலம் தனது முகத்தை மாற்றி பதிவிட்டார். தற்போது விஷாலின் அந்த சண்டை காட்சியை பதிவிட்ட அவருக்கு ட்விட்டர் தளத்தில் சிறப்பான ஒரு பதிலை தெரிவித்துள்ளார் அந்த படத்தில் விஷாலுடன் நடித்த நடிகர் சதீஷ்.

Actionனுக்கு தயாரா என்று Black Eyed Peas ட்விட்டர் பக்கத்தில் பதிவிட "தக்க சயமத்தில் துப்பாக்கியை எடுத்து கொடுத்தது நான் தான்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com