முகப்புகோலிவுட்

இந்தியில் பேச முடியாது - பிரபல நடிகை அதிரடி பதில்!

  | November 25, 2019 12:40 IST
Tapsee

துனுக்குகள்

 • தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் இவர்
 • 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இவர் கலந்துக்கொண்டார்
 • தன் கருத்துகளை துணிச்சலாக பொது மேடைகளில் கூறிவருகிறார் இவர்
கோவாவில் 50ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.  இந்த விழாவை இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து நடத்தி வருகிறது.
 
சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் பிரபல நடிகை டாப்ஸி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்த நிலையில், ஒரு நிருபர் குறிக்கிட்டு 'நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை எனவே நீங்கள் ஹிந்தியில் தான் பேச வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
qnah31jg
 
அதற்கு "நான் பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து உள்ளேன். எனவே நான் ஒரு இந்திய நடிகை. அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்" என பதிலளித்தார். தன்னுடைய கருத்துகளை பொதுமேடைகளில் துணிச்சலாக கூறும் டாப்சி கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com