முகப்புகோலிவுட்

"ஓய்வு பெற்றார் தோனி" - நன்றி சொல்லி விடைகொடுத்த திரைப்பிரபலங்கள்..!

  | August 17, 2020 09:56 IST
Ms Dhoni

துனுக்குகள்

 • இந்நிலையால் திரைபிரபலன்கள் பலரும் அவருடைய இந்த முடிவுக்கு வருத்தத்தையும்
 • வரலக்ஷ்மி தோனியின் மிகப்பெரிய ரசிகை என்பது பலரும் அறிந்ததே, அவர்
 • நடிகர்கள் மோகன்லால், சிவகார்த்திகேயன், சாந்தனு மற்றும் சதீஷ் போன்ற
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ்.தோனி அறிவித்தார். எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடைசியாக மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டில் நடந்த 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றார். இதுதொடர்பாக தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தேசிய அணியுடன் தனது பயணம் குறித்த ஒரு தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.  

இந்நிலையால் திரைபிரபலன்கள் பலரும் அவருடைய இந்த முடிவுக்கு வருத்தத்தையும், சிறந்த ஒரு கிரிக்கெட் வீரராகவும் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்ததற்கும் தங்களது நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "ஒரு வீரனுக்கு விடை தரவே முடியாது, தோனி மைதானத்தை விட்டு வெளியேறுவது என்பது வேறு விளையாட்டை விட்டு வெளியேறுவது என்பது வேறு, எப்போதும் கிரிக்கெட்டோடு இருங்கள், இந்த தேசத்திற்கு கற்றுத்தாருங்கள். உங்கள் சாதனைகள் இளைய வீரர்களுக்கு பாடம் எளியவர்கள் முயன்றால் வெல்லலாம் என்கிற வேதம்." என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரபல நடிகர் வரலக்ஷ்மி தோனியின் மிகப்பெரிய ரசிகை என்பது பலரும் அறிந்ததே, அவர் வெளியிட ட்விட்டர் பதிவில், "எங்களால் சொல்லமுடிந்தது நன்றி மட்டுமே, எங்களுக்கு பெருமைத்தேடி தந்ததற்கு நன்றி. உங்களை போல இன்னொரு பிறக்க வாய்ப்பில்லை. எப்போதும் உங்களை நங்கள் அன்பு செய்கிறோம்" என்று மனமுருகி தெரிவித்துள்ளார். நடிகர்கள் மோகன்லால், சிவகார்த்திகேயன், சாந்தனு மற்றும் சதீஷ் போன்ற பல முன்னணி நடிகர்கள் தங்களது நன்றிகள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com