முகப்புகோலிவுட்

'நான் தான் கேப்டன் Jack Sparrow' - ட்விட்டரில் சேட்டை செய்யும் விஷ்ணு விஷால்..!

  | August 08, 2020 09:44 IST
New App

துனுக்குகள்

 • கடந்த 2019ம் ஆண்டு எந்த படத்திலும் நடிக்காத விஷ்ணு விஷாலின் நடிப்பில்
 • அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் Hulk கதாபாத்திரமாக மாறினார்.
 • நெட்டிசன் ஒருவர் அவருடைய முகத்தை அந்த கதாபாத்திரத்தோடு
நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . ‘நீர்பறவை', ‘முண்டாசுப்பட்டி',  ‘ஜீவா',  ‘இன்று நேற்று நாளை', ‘ராட்ச்சசன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இறுதியாக 2018ம் ஆண்டு வெளியான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு எந்த படத்திலும் நடிக்காத விஷ்ணு விஷாலின் நடிப்பில் இந்த 2020ம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கிறது. காடன், ஜெகஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய திரைப்படைகள் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ட்விட்டர் தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு தற்போது இணையத்தில் வைரலாகும் புதிய செயலி ஒன்றின் மூலம் Captain ஜாக் sparrowவாக மாறியுள்ளார். 

இணையத்தில் தற்போது பிரபல சினிமா கட்சிகளுடன் நமது முகத்தை இணைக்கும் புதிய செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. அண்மையில் பிரபல நடிகர் சதீஷ் இந்த செயலியை பயன்படுத்தி அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் Hulk கதாபாத்திரமாக மாறினார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் பிரபல ஹாலிவுட் திரைப்படமான "pairetes of carebiyan" படத்தில் வரும் Jack Sparrow கதாபாத்திரமாக மாறியுள்ளார். நெட்டிசன் ஒருவர் அவருடைய முகத்தை அந்த கதாபாத்திரத்தோடு இணைத்து வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com