முகப்புகோலிவுட்

பிக்பாஸ் மீரா மிதூன் மீது பாய்ந்தது கொலை மிரட்டல் வழக்கு!

  | November 05, 2019 11:16 IST
Meera Mithun

துனுக்குகள்

  • பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் காவல்துறையை விமர்சித்தார் இவர்
  • ஹோட்டல் உரிமையாளர் மீரா மிதூன் மீது கொலைமிரட்டல் புகார் அளித்துள்ளார்
  • புகாரின் அடிப்படையில் மீரா மிதூன் மீது போலிஸார் வழக்கு பதிவு
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் போட்டியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியானது 3வது சீசனாகும். இந்த போட்டியில் 16பேர் கலந்துக்கொண்டு விளையாடினர்.
மக்களின் வாக்கு வித்யாசத்தில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கடைசியில் ஒருவர் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.இந்த சீசனில் முகென் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
 
போட்டியில் பங்கெடுத்த ஒவ்வொருவரும் தற்போது ஆங்காங்கே வாய்ப்புகள் கிடைக்க வேலைகளில் பிஸியாகி விட்டனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பிக் பாஸ் கொண்டாட்டமும் ஒளிபரப்பாகி வருகிறது.
 
போட்டியில் பங்கெடுத்த மதுமிதா வெளியேறிய பிறகு பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இவரைத் தொடர்ந்து வெளியேறிய மீராமிதூன் அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பங்கெடுப்பதற்கு முன் அட்வாண்ஸ் எதுவும் பெறவில்லை என்றும் போட்டி முடிந்தும்  இதுவரை கொடுக்க வேண்டிய பணம் தரப்படவில்லை என்று புகார் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
 
இது தவிற காவல் நிலையத்தில் இவர் மீது சில புகார்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மீராமிதுன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது போலீசாரை கடுமையாக விமர்சித்து மீரா மிதுன் பேசியிருந்தார். இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் காவல்துறையினர், ஹோட்டல் அதிகாரி அருணுக்கு நடிகை மீராமிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹோட்டல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்