முகப்புகோலிவுட்

அஜித்தின் 60வது படத்தில் இணைந்த பிரபலங்கள் !

  | October 14, 2019 18:10 IST
Ajith

துனுக்குகள்

 • இரண்டாவது முறையாக அஜித் வினேத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்
 • போனிகபூரின் மகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
 • இப்படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது
Thala60: எச்.வினோத் இயக்கத்தில் அஜித்(Ajith) இரண்டாவது முறையாக நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இந்தாண்டு தொடக்கத்தில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்'. இந்த படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் திரைவாழ்க்கையில் அவர் நடித்து அதிக வசூல் சாதனை செய்த முதல் படம் என்கிற பெயரையும் இப்படம் பெற்றது. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்க நயன்தாரா(Nayanthara) அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
 
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்(Sridevi) கனவர் போனி கபூர்(Boni kapoor) தயாரித்த ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்'(Pink) படத்தின் ரீமேக்கான இப்படத்தை அதன் ஜீவன் குறையாமல் இயக்கி இருந்தார் எச்.வினோத் (H.Vinoth) .
 
6n8uii5

 
இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி கை கோர்த்துள்ளது. அஜித்தின் 60 வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை, நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. மேலும் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆர்ட் இயக்குனர் கதிர், இசையமைப்பாளர் யுவன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com