முகப்புகோலிவுட்

கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் புகார்!

  | September 26, 2019 13:57 IST
Kamal Hasan

துனுக்குகள்

 • ஞானவேல் ராஜா தயாரிப்பில் கமல் நடிக்காததால் தயாரிப்பாளர் புகார்
 • கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்
 • தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறர் கமல்
தமிழில் முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தற்போது ஞானவேல் ராஜா கமல் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
o2drce9o

 
சங்கரின் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் கமல் ஹாசன். இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகாரில்,
 
அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'உத்தமவில்லன்' படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்று இன்று வரை தனது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞானவேல் ராஜா புகாருக்கு விளக்கமளித்துள்ள கமல் தரப்பினர், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com