முகப்புகோலிவுட்

‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் அருண் விஜயின் ‘கேரக்டர் லுக்’ வெளியானது..!

  | December 05, 2019 10:13 IST
Arun Vijay

துனுக்குகள்

 • அக்னிச் சிறகுகள் படத்தை ‘மூடர்கூடம்’ நவீன் இயக்குகிறார்.
 • இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கின்றனர்.
 • இப்படத்தை அம்மா க்ரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார்.
மூடர்கூடம் நவீன் இயக்கும் ‘அக்னிச் சிறகுகள்' படத்திலிருந்து அருண் விஜயின் ‘கேரக்டர் லுக்' வெளியாகியுள்ளது.

மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் மாதவ் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘அக்னிச் சிறகுகள்'. இப்படத்தை அம்மா க்ரியேஷன்ஸ் பேனரில் டி.சிவா தயாரிக்கிறார். இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். கப்பல், ஒரு கன்னியும் மூன்று களவாணியும், என்கிட்ட மோதாதே, இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, மூடர் கூடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து விஜய் ஆண்டணி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இப்படத்தின் இயக்குனர் நவீன் சமீபத்தில் வெளியிட்டார். 
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோவான அருண் விஜயின் கேரக்டர் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அருண் விஜயின் கதாப்பாத்திரப் பெயர் ரஞ்சின் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com