முகப்புகோலிவுட்

30 மில்லியன் வியூஸுடன் வைரல் ஹிட்டாகும் ‘செல்லம்மா’ பாடல்.!

  | September 03, 2020 18:20 IST
Chellamma Single

இப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக ‘நெஞ்சமே’ எனும் பாடல் பாடலும் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இரண்டு படங்கள் தான் அயலான் மற்றும் டாக்டர். இதில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘செல்லம்மா' பாடல் ஜூலை மாதம் லிரிக்கல் வீடியோவாக வெளியானது. டிக்-டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட்டதை குறிப்பிட்டு தொடங்கும் இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, இனையத்தில் செம வைரலானது.

சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள இந்த அட்டகாசமான பாடல், இப்போது youtube தளத்தில் 30 மில்லியன் வியூஸ்களை (3 கோடி வியூஸ்) தாண்டி கலக்கிவருகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #Chellamma எனு ஹாஷ்டேகை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதற்காக இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ‘டாக்டர்' ஒரு மெடிக்கல் த்ரில்லர் அல்ல, மாறாக இது மிகவும் வேடிக்கை நிரம்பிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக ‘நெஞ்சமே' எனும் பாடல் பாடலும் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. மெலோடியான இப்பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com