முகப்புகோலிவுட்

தர்பார் படத்துக்குத் தடை..! உயர்நீதிமன்றம் உத்தரவு..!

  | January 07, 2020 19:53 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரித்துள்ளது.
ரஜினியின் ‘தர்பார்' திரைப்படம் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

இப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் வெளியாவதற்கு தடை கோரி மலேசியாவைச் சேர்ந்த திரைப்பட வினியோக நிறுவனமான DMY Creations சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அதில், படத்தயாரிப்புக்காக ரூ.12 கோடியை, ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு லைக்கா நிருவனம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்தத் தொகை தற்போது வட்டியோடு ரூ. 23.70 கோடியாகியுள்ளதாகவும், அதனை இப்போது வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், தர்பார் திரைப்படத்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. அதையடுத்து அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு உரிய பதில் அளிக்கவேண்டுமென லைக்கா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தீரப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், லைக்கா நிறுவனம் ரூ. 4.90 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அல்லது, வங்கியில் டெபாசிட் செய்யும் வரை, தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கு இசைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு டெபாசிட் செய்யும் பட்சத்தில், தடையில்லாமல் மலேசியாவில் வெளியிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தர்பார் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், இந்த வழக்கு லைக்கா நிறுவனத்துக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்