முகப்புகோலிவுட்

ஜெயலலிதா பயோபிக் விவகாரம்! இரண்டு முக்கிய இயக்குநர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

  | November 05, 2019 16:38 IST
Jeyalaitha

துனுக்குகள்

  • ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்
  • ஜெ.தீபா படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்
  • கவிதம் வாசுதேவ் மேனன் இந்த இணைய தொடரை இயக்கி வருகிறர்
ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் ஏ. எல்.விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இயக்குனர் ஏ.எல்.விஜய் படமாக்குகிறார். இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழில் ‘தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், இந்தியில் ‘ஜெயா' என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.

விஜயைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை கௌதம் வாசுதேவ் மேனன் வெப் சீரீஸாக எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கபோவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், தலைவி படத்தையும், வெப் சீரீஸையும் தயாரிக்கத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த தயாரிப்புகளால் தங்கள் குடும்பத்தின் அந்தரங்கம் பாதிக்கப்படலாம் என அச்சப்படுவதாகவும், படத்தில் தன்னுடைய கதாப்பத்திரத்தையும் இணைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அதனால், தன்னுடைய அனுமதி இல்லாமல், இவை படமாக்கப்படக் கூடாது என்று கூறினார். மேலும், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படாத வகையில் இத்திரைக்கதைகள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து, இந்த தயாரிப்புகள் தொடர்பாக கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஏ.எல்.விஜய் ஆகிய இருவரும், நவம்பர் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்