முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் அதிகாரி.

  | April 23, 2019 16:44 IST
Lok Sabha Election   2019

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் எம்.ராஜேஷ் இயக்கத்தில் mr.லோக்கல் படத்தில் நடித்துள்ளார்
  • பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்
  • மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்
 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட சிறப்பு சலுகை அளித்த அதிகாரி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கையில் மை மட்டுமே வைத்து அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
 
 கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்கெடுப்பு காலை முதலே விறுவிறுப்பாக நடந்தது. திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.  
 
 வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க மனைவியுடன் வந்தார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் உள்ள 303 எண்ணில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயனின் பெயர் வாக்களார் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது.
 
வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் அவர் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர் வாக்களிக்க முடியாமல் துரும்பிச்சென்றார்.
 
 இதேபோன்று நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், நடிகை சோனியா போஸ், டிரம்ஸ் சிவமணி போன்றவர்களுக்கும் வாக்கு இல்லை. நடிகர் ஸ்ரீகாந்துக்கும் வாக்கு இல்லை. ஆனால் அவர் கையில் மை மட்டும் வைத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை என செய்தி வெளியானது. அவர் மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவருக்கு சிறப்புச் சலுகை கொடுத்து கைரேகை பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வாக்களித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.
 
 நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்த சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் சிவகார்த்திகேயனுக்கு விதியை மீறி வாக்களிக்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் எப்படி வாக்களித்தார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்குப் பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி,
 
''அவ்வாறு அனுமதித்தது தவறு. சிவகார்த்திகேயனுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் எப்படி வாக்களிக்க அனுமதித்தார்கள் என்று கேட்டுள்ளோம். வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
என்ன நடைமுறையை அங்குள்ள வாக்குச்சாவடி அதிகாரி கடைபிடித்தனர் என்று கேட்டுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று நடிகர் ஸ்ரீகாந்த் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டது. அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. மை வைக்க யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்மீதும் தவறிருந்தால் நடவடிக்கை வரும்'' என்று தெரிவித்தார்.
 
சிவகார்த்திகேயன் கள்ள ஓட்டு போட்டதாக கருதலாமா? நடவடிக்கை வருமா என்று கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த சத்யபிரதா சாஹு, ''வாக்காளர்கள் வாக்களிக்கும் மனநிலையில் ஆர்வத்துடன் வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் கேட்க அவர்களுக்கு உரிமை உள்ளது. சிவகார்த்திகேயனும் அதைத்தான் செய்தார்.
 
ஆனால், அதிகாரிகளுக்கு வாக்களிக்கும் நடைமுறை குறித்து நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். அதை மீறி விதியை மீறி அனுமதித்துள்ளனர். இது அதிகாரிகளின் தவறு, வாக்காளரின் தவறல்ல'' என்று தெரிவித்தார் இதனால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளதுள்ளது…
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்