முகப்புகோலிவுட்

டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் பலி! திரையுலகை துக்கத்தில் ஆழ்த்திய சோக சம்பவம்!

  | October 21, 2019 15:56 IST
Dengue

துனுக்குகள்

 • ஜுனியர் பாலகிருஷ்ணன் என்றழைக்கப்படும்பவர் கோகுல் சாய்கிருஷ்ணா
 • டெங்கு காய்ச்சல் காரணமாக இவர் உயிர் இழந்தார்
 • திரையுலகினர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வருகிறது. நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு அந்தந்த மாநில அரசுகள் டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
 
வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சாய்கிருஷ்ணா கடந்த அக்டோபர் 18-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
ஜூனியர் பாலகிருஷ்ணா என்றழைக்கப்படும் கோகுல் சாய்கிருஷ்ணாவின் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் கோகுல் சாய்கிருஷ்ணாவின் எதிர்பாராத மரணம் குறித்த தகவல், தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாகவும், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினர்களுக்கு தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com