முகப்புகோலிவுட்

தனுஷின் குரலில் வெடிக்கவுள்ள ‘பட்டாஸ்’ பட பாடல்..!

  | December 02, 2019 11:42 IST
Dhanush

துனுக்குகள்

 • தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தை ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
 • இப்படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.
 • இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
பட்டாஸ் படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் இன்று வெளியாகவுள்ளது.

அசுரன் பட வெற்றியையடுத்து, மூன்று வருடம் கழித்து ரிலீஸான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனுஷின் அடுத்த படத்திலிருந்து வெளிவந்துள்ள சூப்பரான அப்டேட்டையும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

‘கொடி' படத்தையடுத்து ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சிநேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைக்கும் இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' எனும் பாடல் இன்று வெளியாகவுள்ளது. படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து, தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதற்கு முன்பாக தனுஷ் பாடிய ரௌடி பேபி, ஒய் திஸ் கொலவெறி உள்ளிட்ட பல பாடல்கள் உலகலவில் ட்ரெண்டாக, தற்போது ‘Chill Bro' பாடலுக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com