முகப்புகோலிவுட்

“மீ டு விவகாரம் அரசு சொன்னதை செய்ததா?”- சின்மயி காட்டம்

  | January 28, 2019 13:46 IST
Metoo Allegations

துனுக்குகள்

  • விஸ்வரூப எடுக்கும் மீ டு விவகாரம்
  • தமிழ் திரையுலகில் பின்னனி பாடகியாக இருக்கிறார்
  • பின்னனி பாடகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் திரைத்துறையில் மீ டு அலை இன்னும் ஓய்ந்த பாடில்லை. சமீபத்தில் பின்னனி பாடகி சின்மயி கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். இந்த பிரச்னை தமிழ்திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றசாட்டுகளை தைரியமாக பொதுச்சமூகத்தில் சொல்ல வேண்டும். அதற்கான முன்னெடுப்பு மீ டு என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் பாடகி சின்மயின் குற்றச்சாட்டைத்தொடர்ந்து திரைப்படத்துறை, சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் தங்களது வாழக்கையில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்தும் பாலியல் மிரட்டல் குறித்தும் பேசினர். அதன்பின் மீடு தாக்கம் வந்த வேகத்தில் குறைந்தது. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய பாடகி சின்மயி
 
“மீ டு விவகாரத்தில் அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள், இதுவரை அமைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பலர் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. சட்டம் எங்களை கைவிட்ட ஒரு நிலைமைதான் உள்ளது , சட்டம் மாற்றப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்