முகப்புகோலிவுட்

கமல், ரஜினியுடன் வைரமுத்து..! கொந்தளிக்கும் சின்மயி..!

  | November 11, 2019 13:12 IST
Rajinkanth

துனுக்குகள்

 • வைரமுத்து மீது metoo குற்றச்சாட்டு வைத்தவர் சின்மயி.
 • கே பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார் வைரமுத்து.
 • மீண்டும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கே. பாலசந்தரின் உருவச்சிலை திறப்பு விழாவில் ரஜினி மற்றும் கமல் ஹாசனுடன் வைரமுத்து கலந்துகொண்டதைக் குறிப்பிட்டு, சின்மயி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கமலின் பிறந்தநாள் மற்றும் 60 ஆண்டு கால சினிமா விழா கொண்டாத்தை முன்னிட்டு இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ராஜ் கமல் இண்டர்நேஷ்னல் நிறுவன அலுவலத்தில் நடந்த அந்த விழாவில் பல திரைப் பிரபலங்கள் அழைப்பின் பேரில் கலந்துகொண்டனர். அவ்வாறு, கவிஞர் வைரமுத்துவும் அதில் கலந்துகொண்டார். அப்போது ரஜினி, கமல் மற்றும் பல பிரமுகர்களுடன் வைரமுத்துவும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாடகி சின்மயி, “நான் இங்கு வைரமுத்துவைக் குறிப்பிடுகிறேன், பாலியல் புகார்கள், ஒருவரின் வாழ்க்கையே அழித்துவிடும் என்பதே நிலையான காருத்தாகும். ஆனால், அவர் தந்து முகத்தை வெளியே காட்டிக்கொண்டே இருகிறார். இந்த ஆண்டு முழுவது பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழிற்சாலை நிகழ்வுகளில் வைரமுத்து முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் உடனடியாக தடை செய்யப்பட்டேன். தமிழக திரையுலகின் பெரியவர்களால் வழங்கப்பட்ட நீதி இதுதான்” என ஆதங்கமான வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளார்.
 
மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பாலியல் துன்புறுத்துபவர்களுக்கு எப்போதும் பொது இடத்தில்  தங்கள் தோற்றத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தெரியும்.  குறிப்பாக பொது தளங்களில் வலிமையாகவும், ஆதரவாகவும் காட்சிப்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு முக்கிய அரசியல்வாதிகள் இருப்பார்கள். இந்த உருவமே பயத்தை உணர வைக்கிறது. இதுவே பல ஆண்டுகளாக எனக்கு பயமாக இருந்தது” என கூறியுள்ளார். சின்மயின் இதுபோன்ற பதிவுகள் இரு தினங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com