முகப்புகோலிவுட்

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா..!! கடுப்பான சின்மயி...

  | December 27, 2019 11:34 IST
Vairamuthu

துனுக்குகள்

 • கவிஞர் வைரமுத்துவுக்கு பிரபல பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கவுள்ளது.
 • அவர் கவிஞர் வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டு வத்துள்ளார்.
 • சின்மயி தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பேசிவருகிறார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு டாகடர் பட்டம் வழங்கப்படவுள்ளதை அடுத்து, கடுப்பான நிலையில் பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை வைத்த அவர், தொடர்ந்து மீ டூ இயக்கத்தின் மூலம் பல பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளையும் சீண்டல்களையும் சமூகத்தில் வெளிப்படையாக கூறி போராடி வருகிறார். தமிழ்நாட்டில் மீ டூ என்பதைப்பற்றி அதிகம் தெரியப்படுத்தியவர் இவர்தான் என்றும் சொல்லலாம். இது போன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவருக்கு படவாய்ப்புகளும் வெகுவாக குறைந்துள்ளது. இந்தப் பிரச்சனைகளில் பலரும் இவருக்கு உறுதுணையாக இருக்க, ஒரு சிலர் இவரைப் பற்றி அவதூறாகவே பேசி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் இவரை இழிவாக கமண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் இவரும் அவரது தாயும் இருக்கும் புகைப்படத்தை, நித்யானதாவுடன் இருப்பது போன்றும் மார்ஃப் செய்யப்பட்டு இணையத்தில் பறவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல தனியார் பல்கலைக் கழகம் வைரமுத்துவுக்கு முணைவர் பட்டம் வழங்க முன்வந்துள்ளது. இம்மாதம் 28-ஆம் தேதி, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பட்டத்தை வழங்கவுள்ளார். அதற்கான அழைப்பிதழும் இணையத்தில் வெளியாக, அதனைப் பார்த்து கடுப்பான சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் அந்த அழைப்பிதழை பதிவிட்டு, “இந்திய பாதுகாப்பு அமைச்சர், இதுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 9 பெண்கள் பெயரிட்ட கவிஞர் வைரமுத்திக்கு கவுரவ பட்டம் வழங்கவுள்ளார். மீண்டும் வலியுறுத்துகிறேன் - வெளியே தெரிந்த பாலியல் துன்புறுத்துபவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அதற்கு பதிலாக நான் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கும் பலர் அவருக்கு சார்பாக பேச, சிலர் “பொறாமை, பழிவாங்குதல்” கவிஞருக்கும் பட்டம் வழங்குவது சரி என்பதாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com