முகப்புகோலிவுட்

'அரசியல் வேண்டாம் ரஜினி' கமலுக்கு சீரஞ்சீவி அறிவுரை?

  | September 27, 2019 19:26 IST
Chiranjeevi

துனுக்குகள்

  • அரசியலுக்கு வரவேண்டாம் என சிரஞ்சீவி ரஜீனி,கமலுக்கு அறிவுரை
  • இவர் நடிப்பில் தற்போது சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாக இருக்கிறது
  • மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் சிரஞ்சீவி
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சீரஞ்சீவி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'சைரா நரசிம்மரெட்டி' திரைப்படம் வருகின்ற 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நடிகராகமட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் தீவிரமாக பணியாற்றி வருபவர் இவர். 5ஆண்டுகள் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
 
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள இவர், முன்னணி நடிகராக இருந்தபோது அரசியலில் நுழைந்ததாகவும், ஆனால் கோடிக்கணக்கான தொகை செலவு செய்து தனது தொகுதியில் தோற்றதாகவும் கூறினார்.
 
மேலும், "என்னைப் போன்ற சென்சிடிவ் தன்மை கொண்டவர்களால் அரசியலில் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் என்னைப் போல் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களிடம் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்குரியது அல்ல. இருப்பினும் தோல்விகளை மீறி நல்லது செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால், அரசியலுக்கு வாருங்கள், ஒரு நாள் விஷயங்கள் மாறக்கூடும்" என்று நடிகர் சீரஞ்சீவி கூறினார். 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்