முகப்புகோலிவுட்

'என்னது 12 கேரக்டரா..?' - வெளியான 'சியான்' விக்ரமின் கோப்ரா பட அப்டேட்

  | February 13, 2020 16:41 IST
Cobra

18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

துனுக்குகள்

  • கோப்ரா படத்தில் 12 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள்
  • 'என்னது 12 கேரக்டரா..?' - வெளியான 'சியான்' விக்ரமின் கோப்ரா பட அப்டேட்
  • தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார்
திரைத்துறையில் குறிப்பாக தமிழ் சினிமாவில், பல வருட போராட்டத்திற்கு பிறகு, கொடிகட்டி பறக்கும் நாயகர்களுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் திரையுலகில் கால்பதித்து பல இன்னல்களை சந்தித்து சிறிது சிறிதாக வளர்ந்து, விஸ்ரூபம் எடுத்த நடிகர் தான் சியான் விக்ரம். அதேபோல உடல் ரீதியாகவும், கதாபாத்திரம் ரீதியாகவும் பல வித்யாசமான விஷயங்களை செய்பவர் விக்ரம். 
 
தமிழ் திரைப்படங்களில் ஆரம்பம காலம்தொட்டே பல நடிகர்கள் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார், தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார், தற்போது அவர்கள் வரிசையில் நடிகர் விக்ரமும் இணைத்துள்ளார். விக்ரம் தான் நடித்து வரும் கோப்ரா படத்தில் 12 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14-ந் தேதியான காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்