முகப்புகோலிவுட்

இணையத்தில் வைரலாகும் ‘சியான்’ விக்ரமின் B&W புகைப்படம்.!

  | August 08, 2020 15:33 IST
Vikram

விக்ரம், மேலும் பொன்னியின் செல்வன், மாவீரர் கர்ணா மற்றும் 'சியான்-60’ ஆகிய படங்களை வரிசையாக கொண்டுள்ளார்.

தன்னை, தனது தந்தையின் மிகப்பெரிய ரசிகன் என்று அழைக்கும் துருவ் விக்ரம், சியான் விக்ரமின் பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கருப்பு & வெள்ளை புகைப்படத்தில், விக்ரம் முற்றிலுமாக ஒரு மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது உடற்கட்டுகள் பார்வையாளர்களை ஈர்க்கிறது. மேலும், நீண்ட தலைமுடி மற்றூம் தாடியுடன் அசத்தலாக காணப்படுகிறார்.

இந்த புகைப்படத்தை துருவ் விக்ரம் வெளியிடப்பட்டவுடனேயே சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகிவிட்டது. மேலும், விக்ரம் ரசிகர்கள் பற்றி சொல்லத் தேவையே இல்லை, அவரது இந்த தோற்றத்தை பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். ஆவேசப்படுகிறார்கள்.

இதற்கிடையில், அவரது ‘கோப்ரா' மற்றும் ‘துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்' படத்தில், ஜான் என்ற பெயரில் ஒரு ரகசிய ஏஜண்ட் பாத்திரத்தில் நடிகர் நடிக்கிறார். இப்படம் ஸ்பை-த்ரில்லர் என்று கூறப்படுகிறது. விக்ரமுடன் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்தீபன், விநாயகர், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா மற்றும் சலீம் பேக் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக தாமதமாகிவரும் இப்படம், இந்த ஊரடங்குகளுக்குப் பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கோப்ரா படத்தை முடிக்க இன்னும் சில முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்படவேண்டியுள்ளன. மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த பூட்டுதல் அகற்றப்படுவதற்கு படக்குழு காத்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, இப்படத்திலிருந்து ‘தும்பி துள்ளல்' எனும் முதல் சிங்கிள் பாடல வெளியானது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், மேலும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், மாவீரர் கர்ணா மற்றும் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘சியான்-60' ஆகிய படங்களை வரிசையாக கொண்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com